நீண்ட நாள் உயிர்வாழ வேண்டுமா? அப்போ இந்த ஆபரேஷன் செய்துக்கொள்ளுங்கள்

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (14:44 IST)
கண்புரை ஆபரேஷன் செய்தால் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் என சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

 
கேட்ராக்ட் எனப்படும் கண்புரை நோய் ஏற்படுவதால் வெயில் அதிகமாக பார்க்க முடியாமலும், இரவில் மங்கலாகவும் பார்வை தெரியும். இதனால் பார்வை மங்கும். பார்வை மங்குவது உடலில் பல நோய்கள் ஏற்பட காரணமாய் அமையும். கண் பார்வை தெளிவு உள்ளவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
 
கேட்ராக்ட் எனப்படும் கண்புரை சிகிச்சை மூலம் அகற்றப்படுவதால் நீண்ட நாள் உயிர் வாழ முடியும் என சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
 
அய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் அனைவரும் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களிடம் 20 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் முழுமையான கண்பார்வை கிடைத்தது. இந்த கண்புரை அறுவை சிகிசை முன் பலர் மரடைப்பு, அல்சர், நுரையீரல் பொன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 
 
இந்த கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின் அவை அனைத்து குணமடைந்து அரோக்கியமான உடல்நிலை அடைந்தனர். மேலும் இந்த கண்புரை அறுவை சிகிச்சையால் கண்பார்வை தெளிவாக தெரிவதால் விபத்துகளில் மூலம் ஏற்படும் மரணமும் தவிர்க்கப்படுகிறது.
 
எனவே கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்கள் நீண்ட நாள் வாழ முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்