பெண்ணாக மாறிய ஆண் கப்பல் மாலுமி ; பணியிலிருந்து நீக்கம்

செவ்வாய், 10 அக்டோபர் 2017 (14:08 IST)
ஆணாக இருந்து பெண்ணாக மாறிய கப்பல் மாலுமி வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


 

 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மணீஷ் குமார் கிரி(25). இவர் கடந்த 7 வருடங்களாக ஐ.என்.எஸ் இக்ஸிகா கப்பற்படை தளத்தில் மாலுமியாக பணிபுரிந்து வருகிறார்.
 
அந்நிலையில், கடந்த வருடம் அவரின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. பணி நேரம் போக, மற்ற நேரங்களில் அவர் பெண்கள் போல் உடையணிந்து, அலங்காரம் செய்ய தொடங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரிடம் மேலதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பின், விடுமுறைக்காக மும்பை சென்ற மணீஷ், அங்கு பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சையை செய்து கொண்டதாக தெரிகிறது.


 

 
இதையடுத்து, அவரை பணி நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மணீஷ் “ நான் ஒன்றும் திருடனோ, பயங்கரவாதியோ கிடையாது. கடந்த 7வருடங்களாக நாட்டுக்காக உழைத்து வருகிறேன். என்னை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்