சீனாவுக்கு எதிராக கனடா... ஒலிம்பிக்ஸ் தொடரை தூதரக ரீதியில் புறக்கணிக்க முடிவு!

வியாழன், 9 டிசம்பர் 2021 (14:02 IST)
அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை தொடர்ந்து குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடரை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக கனடா அறிவிப்பு. 

 
குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் அடுத்த ஆண்டில் சீனாவில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் பலரும் பங்கேற்பது மட்டுமல்லாது உலக நாட்டு அமைச்சர்கள், அரசியல் தலைவர்களும் பார்வையாளராக இடம்பெறுவது வழக்கம்.
 
சீனாவில் இன சிறுபான்மையிருக்கு எதிரான மனித உரிமைமீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டுகொண்டது. இதனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை தொடர்ந்து  சீனாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது.
 
ஆம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் ஒலிம்பிக் போட்டிகயை தூதரக ரீதியில் புறக்கணிப்பது குறித்து நியூஸிலாந்து, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்