இதைவிட வேறென்ன செய்ய முடியும்: முதல்வர் ஸ்டாலினுக்கு நீதிபதி பாராட்டு

வியாழன், 9 டிசம்பர் 2021 (13:37 IST)
ஒரு முதல்வராக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இதை விட வேறென்ன செய்ய முடியும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
 
முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்ததாக சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது குறித்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை நடந்தது
 
இன்றைய விசாரணையின் போது ஒரு முதல்வரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே முதல்வரின் வேலை செய்கிறார். அவரது பணியை பாராட்டாவிட்டாலும் முதல்வரை விமர்சிப்பது போன்ற செயலை தவிர்க்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை நீதிபதி புகழேந்தி அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்