டெல்லி நீதிமன்றம் அருகே வெடிவிபத்து; அதிர்ச்சி தகவல்!

வியாழன், 9 டிசம்பர் 2021 (13:48 IST)
டெல்லியில் உள்ள நீதிமன்றம் அருகே சில நிமிடங்களுக்கு முன்னர் குண்டு வெடித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் சற்று முன்னர் பயங்கர சத்தத்துடன் கூடிய மர்மமான பொருள் ஒன்று வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இந்த வெடி விபத்தை அடுத்து டெல்லி நீதிமன்ற வளாகத்தில் சிறிய அளவு தீ விபத்து ஏற்பட்டதாகவும் உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அந்த தீயை அணைத்ததாகவும் கூறப்படுகிறது 
 
டெல்லி நீதிமன்றம் அருகே வெடித்த மர்ம பொருள் என்ன என்பது குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் இதற்கு யார் காரணம் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. டெல்லி நீதிமன்றம் அருகே வெடிகுண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்