தாடி மீசையுடன் ரோட்டில் ஜாலியாய் வளம் வரும் பெண்!!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (15:00 IST)
நியூயார்க்கில் வசிக்கும் 24 வயது பெண்ணான அல்மா டோர்ரெஸ், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு இருகிறார். 


 
 
16 வயதிலிருந்து இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அல்மா, முகத்தில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர்ந்ததால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார். 
 
ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு, இடுப்பு வலி, தாய்மை அடைவதில் சிக்கல், முகத்தில் முடி போன்ற பல பிரச்சினைகளால் அவதிப்பட்டார்.
 
ஒருகட்டத்தில் மனதளவில் சோர்ந்து போன அல்மா, தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். ஆனால் அவரது காதலர் நம்பிக்கையளித்தார். 
 
அதற்குப் பிறகு தாடி, மீசையுடன் வெளியில் செல்ல ஆரம்பித்தார். தற்போது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் குறித்து பிற பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 
அடுத்த கட்டுரையில்