வங்காள தேசத்தில் பிறந்த குழந்தை ஒன்று இறந்ததாக கருதி இடுகாட்டில் புதைக்கும் நேரத்தில், வீறிட்டு அழுததால், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்காள தேசத்தில் மாவட்ட கிரிக்கெட் வீரர் நஜ்மில் ஹுடா என்பவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
பிறந்ததவுடன் குழந்தைக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 மணி நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து குழந்தைக்கு இறுதி சடங்கு செய்து இடுகாட்டில் புதைக்க முடிவு செய்தனர். இரவு நேரம் ஆகியதால் மறுநாள் புதைக்கலாம் என்று குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து இடுகாட்டிலே விட்டு சென்றனர்.
மறுநாள் இடுகாட்டில் புதைக்க சென்ற நேரத்தில் பெட்டிக்குள் இருந்த குழந்தை வீறிட்டு அழுதது. உடனே குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக டாக்கா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒரு நாள் முழுவதும் இறந்த நிலையில் இருந்த குழந்தை, மறுநாள் திடீரென்று உயிர் பிழைத்தது என்பது அதிசயமான ஒன்றாக உள்ளது.