எல்லாத்துக்குமே ஒரு பக்கெட் தண்ணிதான்! ஆஸ்திரேலிய புது ரூல்!

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (19:54 IST)
ஆஸ்திரேலியாவில் தண்ணீர் பஞ்சம் வாட்டியெடுத்து வரும் நிலையில் புதிய விதிமுறைகளை விதித்துள்ளது ஆஸ்திரேலிய அரசாங்கம்.

உலக நாடுகள் பலவற்றிலும் தண்ணீர் இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா தற்போது வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தண்ணீர் விநியோகம் அளித்து வரும் அணையில் 46 கன அடி தண்ணீரே மிச்சம் உள்ளது.

தொடர்ந்து மக்கள் நீரை விரயம் செய்து வந்தால் அந்த நீரும் சில வாரங்களில் காலியாகிவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அரசு சிட்னி நகர மக்களுக்கு தண்ணீர் உபயோகத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கிறது. அதன்படி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவோ, கார்களை கழுவவோ குழாய்களை பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக தண்ணீரை வாளியில் பிடித்தே பயன்படுத்த வேண்டும். அதுபோல நீச்சல் குளங்களை நிரப்பவும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருக்கின்றன.

அணையில் தண்ணீர் அளவு குறைந்தால் மேலும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில் இறங்கவும் ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வரும் மற்ற நாடுகளும் தங்கள் மக்களுக்கு ‘கேப் டவுன்’ போல கட்டுபாடுகளை விதிக்க முயற்சித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்