24 வருடம் கழித்து இண்டர்வியூ கொடுக்கும் ரஜினி! எதிர்பார்ப்பில் மக்கள்!

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (19:25 IST)
தனது அரசியல்ரீதியான எண்ணங்களை விரிவாக இதுவரை மக்களிடம் பேசியிராத நடிகர் ரஜினிகாந்த் இன்று தொலைக்காட்சியில் நேர்காணல் கொடுக்க இருக்கிறார்.

பல ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் சமீபத்திய நடவடிக்கைகள் மூலம் விரைவில் கட்சி தொடங்க போவதை தெரியப்படுத்திவிட்டார் ரஜினி. மேலும் 2021ல் கமல்ஹாசனுடன் கூட்டணி இருக்கும் என்றும், மக்கள் 2021ல் அதிசயத்தை நிகழ்த்த போகிறார்கள் என்றும் அவர் பேசியுள்ளது தீவிர அரசியலில் ரஜினி இறங்குவதற்கான முதல் படியாகவே தெரிகிறது.

இந்நிலையில் இன்று டிடி தொலைக்காட்சி மூலமாக சிறப்பு நேர்காணல் ஒன்றை கொடுக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இன்று இரவு 9 மணிக்கு டிடி நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிறப்பு நேர்க்காணல், அவருக்கு கோவா திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட விருது குறித்தும், அவரது திரைப்பயணம் குறித்தும் இருக்கும் என கூறப்படுகிறது.

கடந்த 24 வருடங்களுக்கு முன்பு டிடி தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்க்காணல் அளித்த ரஜினிகாந்த் தற்போது மீண்டும் நேர்க்காணல் அளிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் அவர் இந்த மேடையை பயன்படுத்தி தனது அரசியல் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்