ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (08:35 IST)
அமெரிக்காவில் உள்ள ரஷ்யாவின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என அதிபர் ஜோ பைடன் பேட்டியளித்துள்ளார். 

 
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2 வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ள்னர். 
 
ரஷ்ய படைகளின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு அந்நாட்டின் மக்கள் சென்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்கத் தயார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
செர்னோபில் அணு உலை ரஷ்யப் படைகளால் கைப்பற்றப் பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை தனது கவலையை தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது அமெரிக்கா. 
 
அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் பொருளாதார தடையை விதித்ததற்காக ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தயார் எனவும் அமெரிக்காவில் உள்ள ரஷ்யாவின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் எனவும் அதிபர் ஜோ பைடன் பேட்டியளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்