ஏலியன்கள் குறித்த ஆராய்ச்சியில் உலக நாட்டு விஞ்ஞானிகள் பலர் ஈடுபட்டு வரும் நிலையில் ஏலியன்கள் குவாண்டம் துகள்கள் வழியாக தொடர்புகொள்ளலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஏலியன்கள் என்னும் வேற்றுகிரக உயிரினங்கள் குறித்த கற்பனைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஏலியன், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற ஹாலிவுட் படங்களுக்கு பிறகு ஏலியன்கள் குறித்த பேச்சு ஒரு ட்ரெண்டாகவே மக்களிடம் மாறியுள்ளது.
ஏலியன்களை அறிவியலும் முழுவதும் கற்பனை என்று ஒதுக்கிவிடாமல் பூமி போன்ற பல கிரகங்கள் இருக்கலாம் என்றும் வேற்றுகிரக உயிரினங்கள் அதில் வாழலாம் என்றும் தர்க்கப்பூர்வமாக நம்புகின்றனர். இந்நிலையில் ஏலியன்களை எப்படி தொடர்பு கொள்வது அல்லது ஏலியன்கள் எப்படி நம்மை தொடர்பு கொள்ளும் என்பது குறித்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் போட்டாகளின் குவாண்டம் துகள்களை பூமியுடன் தொடர்புகொள்ள ஏலியன்கள் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் சமீபமாக கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து குவாண்டம் துகள்களின் தகவல்களை பெற ஆய்வு செய்வதன் மூலம் அதை கண்டறிய வாய்ப்பு உள்ளதாக கோட்பாட்டு இயற்பியலாளர் அர்ஜுன் பெரேரோ கருத்து தெரிவித்துள்ளார். ஏலியன் அறிவியலில் இது குறிப்பிடத்தகுந்த மாற்றமாக இருக்கும் என கூறப்படுகிறது.