இளைஞரின் நாக்கைக் கடித்து துப்பிய பெண் டாக்டர் ! பதறவைக்கும் சம்பவம்

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (17:49 IST)
தென்ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண் மருத்துவர் வேலை செய்துவந்தார். அவரை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவனிடமிருந்து தப்பிச் செல்ல நினைத்த மருத்துவர் அவனது நாக்கைக் கடித்து துப்பிய தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் பெண்மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் பணிக்களைப்பில் அங்குள்ள அறையில்  தூங்கிக்கொண்டிருந்தார். 
 
அங்கு வந்த ஒரு வாலிபர் , அவரை கற்பழிக்க முயன்று, அவரது வாயில் முத்தம் கொடுத்த வாலிபர் அவரது உதட்டைக் கடித்துள்ளார்.
 
அப்போது அவரிடமிருந்து விடுபட நினைத்த மருத்துவர் அவனிடமிருந்து தப்பிக்க நினைத்தார். விடாத வாலிபர் தனது நாக்கை மருத்துவரின் வாயில் செலுத்தியுள்ளார்.
 
இதனால் கோபமடைந்த அப்பெண் , வாலிபரின் பாதி நாக்கைக் கடித்துத் துப்பினார். இதில் காயமடைந்த வாலிபர் அவ்விடத்திருந்து ரத்த வெள்ளத்துடன் தப்பித்து ஓடினார்.
 
பின்னர் தான் பாதித்த சம்பவம் குறித்து அப்பெண் மருத்துவர் போலீஸிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலிஸார் அந்த வாலிபரைப் பிடித்துச் சிறையில் அடைத்ததாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்