வாலிபரின் மூளையில் இருந்த புழுவை வெளியே எடுக்க 5 வருடம் காத்திருந்த மருத்துவர்கள்: பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (14:49 IST)
வாலிபரின் மூளையில் இருந்த புழுவை வெளியே எடுக்க 5 வருடம் காத்திருந்த மருத்துவர்கள்
சீனாவில் 23 வயது வாலிபர் ஒருவரின் மூளையில் இருந்த 5 இன்ச் புழுவை வெளியே எடுக்க ஐந்து வருடங்கள் மருத்துவர்கள் காத்திருந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
சீனாவை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருக்கு அடிக்கடி திடீரென உடல் முழுவதும் உணர்வற்று போய்விடும். மேலும் அவர் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்தார். இதனையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் சோதனை செய்யப்பட்டது
 
அப்போது அவரது மூளையில் 5 இன்ச் புழு ஒன்று இருப்பதாகவும் அந்த புழு தான் அவரது மூளையை செயல்பட விடாமல் செய்து, அவ்வப்போது உணர்வுகளற்ற மனிதனாக மாற்றி விடுவதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் அதே நேரத்தில் அந்த புழு சரியான பொசிசனுக்கு வந்த பிறகுதான் அறுவை சிகிச்சை செய்து எடுக்க முடியும் என்றும் இல்லையெனில் அவருடைய மூளைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள் 
 
எனவே மருத்துவர்கள் எதிர்பார்க்கும் பொசிசன் வரும் வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மருத்துவர்கள் எதிர்பார்த்த பொசிசனுக்கு அந்த புழு வந்ததை அடுத்து தற்போது அறுவை சிகிச்சை செய்து அந்த புழுவை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர் தற்போது அந்த வாலிபர் நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்