விமானத்தில் பயணித்த பயணி போதையில் செய்த காரியம்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (12:24 IST)
விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆல் நிப்பான் ஏர்வேஸ் என்ற விமானம் ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் போதையில் அவருக்கு பின்னால் இந்த இளைஞரிடம் வம்பிழுத்துள்ளார். சற்று நேரம் இதனை பொறுத்துக்கொண்ட அந்த இளைஞர், பின் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
ஒருகட்டத்தில் அந்த மதுபோதை பயணி, இளைஞரை தாக்கினார். பதிலுக்கு அந்த இளைஞரும் போதை ஆசாமியை சரமாரியாக தாக்கினார். பின் விமானப்பணிப் பெண் அவர்களது சண்டையை தடுத்து நிறுத்தினார்.
 
சற்றுநேரம் அமைதியாய் இருந்த அந்த போதை போதை பயணி, மீண்டும் அந்த இளைஞரை தாக்கினார். இதனையடுத்து அந்த போதை ஆசாமி விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்