உலக அளவில் கொரோனா பாதிப்பு 93.45 லட்சம்: தினமும் 1.5 லட்சம் உயர்வதால் பதட்டம்

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (07:12 IST)
உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு தினமும் 1.5 லட்சம் உயர்ந்து கொண்டே வருவதால் மனித இனத்திற்கே விடப்பட்ட சவாலாக இந்த நோய் உள்ளது. நேற்று உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு 91,85,229 ஆக இருந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இன்று உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 93,45,569ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,36,723 ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,78,949 ஆகவும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 24,24,168ஆக உயர்ந்துள்ளது என்பதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,23,473ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரேசிலில் 11,51,479 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ரஷ்யாவில் 599,705 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இங்கிலாந்தில் 306,210 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ஸ்பெயினில் 293,832பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 
பெரு நாட்டில் 260,810பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், சிலி நாட்டில் 250,767பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இத்தாலியில் 238,833 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ஈரானில் 209,970 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 
ஜெர்மனியில் 192,778பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், மெக்சிகோவில் 191,410 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் 456,115பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 14,483 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் 258,574 கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்