இதனையடுத்து, அந்த பகுதிக்கு உடனடியாக விரைந்த போலீசார் துப்பாக்கி கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்ப்போது அந்த வீட்டின் உள்ளே நான்கு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சுட்டு கொல்லப்பட்டு இருந்தது போலீசார்க்கு தெரியவந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த 7 பேரின் உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.