ஆஸ்திரேலிய ஊடகங்கள் மோசமானவை: ஏ.பி.டிவில்லியர்ஸ்!

சனி, 5 மே 2018 (15:22 IST)
ஐபிஎல் போட்டிகள் விற்விறுப்பாக நடந்து வரும் நிலையில், பெங்களூர் அணியை சேர்ந்த ஏ.பி.டிவில்லியர்ஸ் ஊடங்கலை பற்றி ஒரு நேர்காணலின் பேசியுள்ளார். அதன் தொகுப்பு பின்வருமாறு...
 
சமீபத்தில் பெங்களூர் அணியை சேர்ந்த விராட் கோலி, டிவில்லியர்ஸ், சாஹல் ஆகியோர் தனியார் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது ஓவ்வொரு நாட்டிலும் ஊடகங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்ற ஏ.பி.டிவில்லியர்ஸ் இடம் கேள்வி கேட்கப்பட்டது. 
 
அதற்கு அவர், என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய ஊடகங்கள்தான் மோசமானவை. ஆங்கில பத்திரிகையாளர்களும் மோசமானவர்கள்தான். ஆனால் அவர்களிடம் கொஞ்சம் தெளிவு இருக்கும். அதனால் அவர்கள் தந்திரமான கேள்விகளை கேட்பார்கள் என்று கூறினார்.
 
இதற்கு விராட் கோலி, நாங்கள் இங்கிலாந்து சென்று விளையாடும்போது அவர்கள் தங்கள் நாட்டு அணியையும், எதிர் தரப்பையும் சமமாகப் பார்ப்பார்கள். இரு தரப்பையும் சமமாக விமர்சிப்பார்கள். சொல்லப்போனால் எதிர் அணி வெற்றிபெற்றால் அவர்கள் அணியைவிட கூடுதலாக பாராட்டுவார்கள் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்