பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மீது துப்பாக்கி சூடு

திங்கள், 7 மே 2018 (11:06 IST)
பாகிஸ்தானில் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அசன் இக்பால்(59). இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியில் முக்கிய பதவி வகிக்கிறார்.
 
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அசன் இக்பால் பாகிஸ்தானில்  பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு அசன் இக்பால் நரோவால் மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ருர் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
 
அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், கூட்டத்தில் இருந்த வாலிபர் அசன் இக்பால் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் அவருடைய வலதுபக்க தோள்பட்டையில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள், அசன் இக்பாலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அசன் இக்பாலை சுட்ட வாலிபரை பிடித்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்