காஸாவில் தொடர் போராட்டம்: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (11:58 IST)
இஸ்ரேல்- பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காஸா பகுதியில் நடந்து வரும் தொடர் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.  
 
இஸ்ரேல்- பாலஸ்தீன நாட்டின் எல்லைப்பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் அமைப்பினர், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
 
ட்ரம்பின் இந்த அறிவிப்பால் போராட்டம் மேலும் தீவிரமானது, காஸா பகுதியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவ படையினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்த போராட்டத்தில் இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம அடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்