எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட மூன்று மம்மிகள்!!

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (12:43 IST)
எகிப்தில் பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி வைக்கப்படும். அவ்வாறு பதப்படுத்தி வைக்கப்படும் உடல் மம்மி என அழைக்கப்படுகிறது.


 
 
இந்நிலையில் தற்போது புதிய மம்மிக்கள் கண்டறியப்பட்டுள்ளன. எகிப்த் தலைநகர் கெய்ரோவில் இருந்து 400 கி.மீ தொலைவில் நைல் நதியின் கரையில் லுசார் நகரம் உள்ளது. 
 
அங்கு அமெனம்காத் என்பவரின் பிரமீடு உள்ளது. அந்த பிரமீடுக்களுள் இந்த மம்மிக்கள் கண்டு பிடிக்கப்பட்டன. 
 
அங்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களின் மம்மிக்கள் இருந்தது. இந்த மம்மிக்கள் 50 வயது நிரம்பிய பெண் என்றும், மற்ற இரண்டும் அவரது 20 மற்றும் 30 வயது மகன்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தாய் எலும்புருக்கி நோயினாலும், மகன்கள் வேறு நோயினாலும் இறந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கி.மு.11 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்