மர்மம் விலகா பிரமிடுகள்: யாரும் அறிந்திடா தகவல்கள்!!

செவ்வாய், 6 ஜூன் 2017 (11:30 IST)
உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள் மிக விந்தையான, பல வரலாற்று செய்திகளை உள்ளடக்கியது. 


 
 
பிரமிடுகளில் மிகப் பெரியது கிசா பிரமிடு. இது 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் 9 டன் எடை கொண்டது. 
 
500 அடி உயரம் கொண்ட இந்தப் பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறைக் கற்களால் எழுப்பப்பட்டது.
 
சுண்ணாம்புக் கற்கள் நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பளிங்கு சுண்ணாம்புக் கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ளன.
 
இங்கு பிரமிடின் உடல்கள் கெடாமல், முற்றிலும் உலர்ந்த நிலையில் உள்ளன. அந்த பிரமிட்டின் உள் அறைகளில் உள்ள சதுர துளைகள், அதன் பின்னர் இருக்கும் ரகசியங்கள் இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் உள்ளது.
 
மேலும், பிரமிட்டின் உள்ள சில வாயில்கள் அடைக்கப்பட்டுள்ளது. எதற்காக சில அடைக்கப்பட்டுள்ளது அவற்ரில் என்ன உள்ளது போன்ற ஆராய்ச்சிகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
 
எகிப்தில் கட்டப்பட்டுள்ள கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் Hermetic Geometry முறையில்கட்டப்பட்டதாக தெரிகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்