உலகின் மாசடைந்த 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 14 நகரங்கள் - அதிர்ச்சித் தகவல்

Webdunia
புதன், 2 மே 2018 (13:41 IST)
உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியாவில் மட்டும் 14 நகரங்கள் மாசடைந்த நகரங்கள் என தெரியவந்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பான (WHO) உலக அளவில் காற்றுமாசு அதிகமாக இருக்கும் நாடுகள் பற்றி ஆய்வு நடத்தி வந்தது. அதில் உலகளவில் 20 நாடுகள் அதிக காற்று மாசு ஏற்படும் நகரம் என தெரிய வந்தது. அதில் 14 இந்திய நகரங்கள் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதில் இந்தியாவில் லக்னோ, பரிதாபாத், வாரணாசி, கயா, பாட்னா, டெல்லி, ஆக்ரா, முசாபர்பூர், ஸ்ரீநகர், குர்கான், ஜோத்பூர், பாட்டியாலா, உள்ளிட்ட 14 பெரிய நகரங்கள் காற்றுமாசால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதில் வாரனாசியில் மாசு மிக அதிக அளவில் உள்ளது. 
 
இந்த அறிக்கையின்படி, 90 சதவீதத்திற்கும் மேலான காற்று மாசுபாடு தொடர்பான இறப்புக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது.
கார்பன், நைட்ரேட், சல்பேட் மாசுக்கள் காற்றில் கலந்து இதய பிரச்சனை, கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுத்துகின்றன. உலகில் ஆண்டுதோறும் 7 கோடி மக்கள் சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதால் இறக்கின்றனர். 10 ல் 9 பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்