தமிழகத்திற்கு அகதியாக வர முயன்ற 13 பேர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (14:48 IST)
தமிழகத்திற்கு அகதியாக வர முயன்ற 13 பேர்களை கைது செய்த இலங்கை கடற்படை!
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வர முயன்ற 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இலங்கையில் கடும் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஏராளமானோர் அகதியாக வந்து கொண்டிருக்கிறனர். அவ்வாறு அகதிகளாக வந்தவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
 
 இந்த நிலையில் நேற்றிரவு திரிகோணமலையில் இருந்து மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தங்களது சொத்துக்களை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து  தமிழகத்திற்கு வரவுக்காக காத்திருந்தனர் 
 
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை செய்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்து. போலீஸார் அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்