சோமாலியாவில் 48 மணி நேரத்தில், 110 பேர் பலி: காரணம் என்ன??

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (12:45 IST)
சோமாலியா நாட்டில் கடும் பஞ்சம் நிலவி வருகிறது. இங்கு 48 மணி நேரத்தில் 110-க்கும் அதிகமானோர் உணவு இல்லாததாலும், நோய் தொற்றாலும் இறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.


 
 
சோமாலியா நாட்டில் தண்ணீர் இல்லததால் விவசாயம் முற்றிலும் அழிந்து போயுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்கு சென்றுள்ளது. 
 
இந்நாட்டில் நிலவும் கடும் பஞ்சத்தால் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 2,70,000 குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதாக யுனிசெப் அறிவித்துள்ளது.
 
மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டிலும் இதே போல ஏற்பட்ட கடும் பஞ்சத்தினால் 2,60,000 மக்கள் பறிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்