மகளிர் தினம் : கைகள் இல்லாத சிறுமிக்கு செயற்கைக் கை அளித்த நடிகர்

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (18:44 IST)
மகளிர் தினம் : கைகள் இல்லாத சிறுமிக்கு செயற்கைக் கை அளித்த நடிகர்

கைகள் இல்லாமல் பிறந்த சிறுமி ஒருவருக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ஹாமில் கைகளை பரிசளித்துள்ளார். 
 
பெல்லா டட்லாக் என்ற சிறுமி பிறக்கையிலேயே வலது கையில் நான்கு விரல்கள் மற்றும் இடது கை வலது கையை விட உயரம் குறைவானதாக இருந்தது. 
 
இந்நிலையில்,டட்லாக் சிறுமி என்பதால், தானும் மற்ற சிறுமிகள் மாதிரி விளையாட வேண்டும் என ஆசை கொண்டு, செயற்கைக் கை வேண்டுமென ஓபன் பயோனிக் நிறுவனத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்த செயற்கை கை விலை உயர்ந்ததாக இருந்ததால், தனக்க்கு கை வேண்டுமென்பதற்காக டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
 
டட்லாக்கின் பதிவைப் பார்த்த ஹாலிவுட் நடிகர், மார்க் ஹாமில் ( இஅவர் ஸ்டார் வார்ஸ் என்ற படத்தில் ஸ்கை வாக்கர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்).அந்தப் பதிவை அவர் பார்த்துடன் பகிர்ந்து சிறுமிக்கு உதவ வேண்டுமென கேட்டுள்ளார்.
 
இதனையடுத்து மக்கள் பலர் உதவி செய்தனர். அதன்படி 14 ஆயிரம் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் 10 லட்சம் டாலர்கள் நிதி அளித்திருந்தனர். 
தற்போது, சிறுமிக்கு ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போன்ற செயற்கை கை பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்