பெண்களே நம் நாட்டின் கண்கள்....

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (18:10 IST)
பெண்கள் தாயாக, மனைவியாக, மகளாக உறவுகளுக்கிடையே நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். எனினும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும்  பலவிதமான ஒடுக்குமுறை வன்முறைகள் போன்றவை இன்றும் நம் மக்களிடையே நிரம்பியுள்ளதை நம்மால் மறுக்க இயலாது. 
சமூகப் போராட்டங்கள் மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் மிளிர்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், குடும்ப பொறுப்புகளை வெற்றிகரமாக மேற்கொண்டு  நடத்திட்ட, நடத்திக்கொண்டிருக்கிற பெண்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கும் வகையில் இந்நாளை நாம் கொண்டாடுகிறோம்.
 
பெண்களை இயற்கை சக்தி என்றே சொல்லலாம். ஏனெனில் ஒரு பெண்ணால் எந்த ஒரு சூழலையும் தன் அன்பு மழையால் செழிக்க செய்யவும் முடியும். அதே  பெண்கள் கோப புயலாய் மாறி சுழற்றி எடுக்கவும் முடியும். கருணையின் நிழலில் வாழ வைக்கவும் முடியும். பெண் இயற்கை சக்தியை ஒத்த குணாதிசயங்கள்  கொண்ட ஒரு ஒப்பற்ற பிறவி என்பதை நாம் உணர்ந்திருப்போம்.
 
உலகமே இவர்களால் இயங்கினாலும், இவர்களுக்கு எதிரான வன்முறை இன்றும் இங்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பது தான் வேதனை. இப்படி பல்வேறு பரிணாமங்களை பெற்ற பெண்ணின் சிறப்பு விவரிக்க இயலாது. உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்புமிக்கவள் ஆவாள்.
 
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை களைந்து பாலின சமத்துவத்தை நிலைநிறுத்துவது அதன் நோக்கம். அதே நேரத்தில் சமூகம்,  பொருளாதாரம், கலாசாரம், அரசியல் ஆகிய துறைகளில் பெண்கள் அடைந்துள்ள சாதனைகளை இன்றைய தினம் கொண்டாடுகிறது. பெண்களை போற்றாத வீடும்  நாடும் வீணே என்பதே சத்தியமான உண்மை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்