பெண்ணுகளுக்கு உரிய உரிமைகள் எது...?

வெள்ளி, 5 மார்ச் 2021 (11:27 IST)
மகளிர் தினத்தில், கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகுப் போட்டி என பல போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்படுகின்றன. 


ஊடகங்களும், வர்த்தக நிறுவனங்களின் மூலம் பெண்கள் பயன்படுத்தும் பொருளுக்கு தள்ளுபடியுடன் கூடிய வாழ்த்துகளை கூறுகின்றன. 
 
மகளிர் தினம் குறித்து அறிய அதன் தோற்றத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். 1910-ம் ஆண்டு, டென்மார்க் தலைநகரில் கம்யூனிஸ்ட்  கட்சியைச் சேர்ந்த தோழர் கிளாரா ஜெட்கின் தலைமையிலான உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில், பெண்களின் பிரச்சினைகளுக்கு சோசியலிஸ்ட்  பார்வையுடன், உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
இதனடிப்படையில் 1917-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம்  நடத்தினர்.  இந்தப் புரட்சிகர தினமே உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான ஆண்களும் கலந்துகொண்டனர்.
 
பெண்கள் என்றவுடன் அவர்களின் பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில், பெண்களின் பாதுகாப்பு பற்றிய ஆய்வின்  முடிவுகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
 
இப்படி கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ளனர். சமூகம் அவளுக்கு சமமான  இடத்தை வழங்கினாலும், வழங்காவிட்டாலும் அவளுக்கு ஆணை விட உயர்ந்த இடத்தையே இயற்கை வழங்கி உள்ளது.
 
இந்த உலகின் உயிர்கள் போற்றி வளர்க்கப்பட்டுள்ளன, போற்றி வளர்க்கப் படுகின்றன. ஒருவரின்  குடும்பத்தின் உணர்வு மயமான சூழல் பெரும்பாலும் ஒரு பெண்ணால்தான் நிர்ணையிக்கப்படுகிறது. எனவே, பெண்ணுக்கு உரிய உரிமைகளும் மரியாதையும் தரப்படுவதுதான் நியதியாகும். எனவே பெண்களை போற்றி மகளிர் தினத்தை கொண்டாடுவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்