சுவையான சேனைக்கிழங்கு வறுவல் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
சேனைக்கிழங்கு - 2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 4
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
சேனைக்கிழங்கை சிறு துண்டுகளாக்கிக் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். அடுத்து வரமிளகாய், பூண்டு, சோம்பு போன்றவற்றினை பேஸ்ட்டாக அரைக்கவும்.
 
அடுத்து சேனைக்கிழங்கினை தோல் உரித்து, மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து ஊறவிடவும்.
 
அடுத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சேனைக்கிழங்கு, உப்பு சேர்த்து வறுத்தால் சேனைக்கிழங்கு வறுவல் தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்