சுவையான கொத்தவரங்காய் பருப்பு உசிலி செய்வது எப்படி...?

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (12:50 IST)
தேவையான பொருட்கள்:

கொத்தவரங்காய் - கால்கிலோ
துவரம் பருப்பு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - இரண்டு
பூண்டு - இரண்டு பல்
இஞ்சி - சிறிய துண்டு
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க ஏற்ப



செய்முறை:

கொத்தவரங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை கால் மணி நேரம் ஊறவைக்கவும்.

பின், இத்துடன், மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். இதை இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உ.பருப்பு, தாளித்து கொத்தவரங்காயை சேர்த்து சமையல் சோடா போட்டு நன்கு வதக்கவும்.

பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு டீஸ்பூன் தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு மூடிவைத்து விடவும். ஐந்து நிமிடம் கழித்து திறந்து வேகவைத்து உதிர்த்த து.பருப்பையும் கொட்டிக் கிளறி இறக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்