சுவையான பன்னீர் 65 செய்ய...!!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பன்னீர் - 100 கிராம் 
மைதாமாவு - 2 மேஜைக்கரண்டி 
சோளமாவு - 1 மேஜைக்கரண்டி 
தயிர் - 1 மேஜைக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
சிவப்பு மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி 
லெமன் சாறு - 1 மேஜைக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை:
 
பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோளமாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு  மிளகாய் தூள், கரம் மசாலா தூள், லெமன் ஜூஸ், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
 
பிறகு பன்னீர் துண்டுகளை டிப் பண்ணி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு பன்னீர் துண்டுகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து  விடவும். சுவையான பன்னீர் 65 தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்