வீடானது வாஸ்துப்படி அமைக்கப்படுவதற்கான காரணங்களும் பலன்களும் !!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:46 IST)
வீடு என்பது வெறும் கட்டடமாகவே நாம் பார்ப்பதில்லை. உயிருள்ள விஷயமாக, நம் மனதுடன் இரண்டறக்கலந்துவிட்ட விஷயமாகவே பார்க்கப்படுகிறது.


சொந்த வீடோ, வாடகை வீடோ எதுவாக இருந்தாலும் அங்கே வீடானது வாஸ்துப்படி இருக்கவேண்டும். வாஸ்துப்படி இருக்கிற ஜன்னலும் கதவும் ஷெல்ஃப்புகளும் ஸ்விட்ச் போர்டும் கூட, நம்முடைய குணாதிசயங்களை, கேரக்டர்களை, எதிர்மறை நேர்மறை சிந்தனைகளை அசைத்துப்பார்க்கும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.

வாஸ்து பகவானுக்கு உரிய நாளில், வீட்டை சுத்தமாக்கிவிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி வைக்கவேண்டும். வீட்டில் உள்ள அஷ்டதிக்குகளுக்கும் எல்லா மூலைகளிலும் தீப தூப ஆராதனைகள் காட்டி, பீரோ முதலான துணிமணிகள் வைக்கும் இடம், பணம் வைக்கும் இடம், அரிசி, பருப்பு முதலான தானியங்கள் வைக்கும் சமையலறை உள்ளிட்ட இடங்களில் தீப தூபம் காட்ட வேண்டும்.

வீட்டு நிலைவாசலில் நின்று கொண்டு, தேங்காய் அல்லது எலுமிச்சை அல்லது பூசணிக்காய் கொண்டு திருஷ்டி சுற்றி, முச்சந்தியில் உடைத்துவிட்டு, வீட்டுப் பூஜையறையில் சூடமேற்றி நமஸ்கரித்து பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.

சர்க்கரைப் பொங்கல் அல்லது அவல் பாயசம் அல்லது ஏதேனும் இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்யவேண்டும். அக்கம்பக்கத்தாருக்கு வழங்கவேண்டும். இதனால் வாஸ்துபகவானின் அருளையும் இறையருளையும் பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்