முடி உதிர்தல் பிரச்சனைக்கான முக்கிய காரணங்கள் என்ன...?

செவ்வாய், 29 மார்ச் 2022 (17:03 IST)
முடி கொட்டுவதற்கு என்ன காரணங்கள் உள்ளன என்று முதலில் பார்க்கலாம். உடலில் ஹார்மோன்களின் அளவு சீரான அளவு இல்லாத பட்சத்தில் முடி கொட்டுதல் அதிக அளவு காணப்படும்.


முடி கொட்டுதல் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடுதான். அன்றாட ஆரோக்கிய மற்றும் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.

முடி உதிர்தலும் மன அழுத்தமும் நேரடியாக தொடர்பு கொண்டன. கவலை , அளவுக்கதிகமான யோசனை போன்ற விஷயங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பெரிய அளவு பாதிக்கும்.

உடலுக்குத் தேவையான தூக்கம் கிடைக்காத போதும் முடி உதிர்தல் பிரச்சனை அதிக அளவு காணப்படும்.

சராசரியாக ஒரு நாளுக்கு 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.போதுமான தண்ணீர் அருந்தவில்லை என்றால் முடி நிச்சயமாகக் கொட்டத் தொடங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்