குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (15:17 IST)
1. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும் போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும் போது தனி மணமும், ருசியும் காணலாம். 


 
 
2. பீன்ஸ், பட்டாணி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் நன்றாக குழைய வேக வைக்க வேண்டுமா? முதலில் உப்புப் போடாமல் வேக வைத்து, வெந்தபிறகு உப்பு சேர்க்க வேண்டும்.  
 
3. பன்னீர் மசாலா செய்யும் போது பன்னீரை வறுத்த உடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பன்னீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.  
 
4. சப்பாத்திக்காக கோதுமை பிசையும் போது வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொஞ்ச நேரம் ஊறவைத்து பிறகு சப்பாத்தி செய்தால் மென்மையாக பூப்போல இருக்கும். 
 
5. சுவர்களில் ஆணி அடித்திருப்போம். அது தேவையில்லை எனில் அதை எடுத்துவிட்டு சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப, வண்ணக் கலவையை பற்பசையில் கலந்து ஓட்டை போட்ட இடத்தில் அடைத்துவிட்டால், ஓட்டை தெரியாமல் மறைந்துவிடும்.  
 
6. ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின், பெருங்காயத் தூள் போட்டால் மணம் ஊரைத் தூக்கும்.  

7. கொத்தமல்லி, புதினா துவையல்கள் அரைக்கும் போது, தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை தரும். 

8. கத்திரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவிப் பாருங்கள். கூட்டு, பொரியல் சுவையாக இருக்கும்.  
 
9. மைக்ரோவேவ் ஒவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஒவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க பளிச் சென்று இருக்கும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்