நடராஜன் உடல் நிலை கவலைக்கிடம் : மருத்துவமனை அறிக்கை

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (14:03 IST)
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.  அதன்பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அந்நிலையில் நடராஜனுக்கு நேற்று முன் தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். 
 
தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குளோபல் மருத்துவமனை  நேற்று தெரிவித்தது. 
 
ஒருபக்கம், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா பரோலில் வர இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
 
இந்நிலையில், இன்று குளோபல் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடராஜனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு நுரையீரல் தொற்று காரணமாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்