கீழ்த்தரமான அரசியல்: கடம்பூர் ராஜூவுக்கு கனிமொழி பதிலடி

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (08:10 IST)
மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசு போட்ட பிச்சை என அமைச்சர் கடம்பூர் ராஜூ சமீபத்தில் கூறியதற்கு ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கருணாநிதி நினைவிடம் குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு விளக்கத்தை வெளியிட்டார். இந்த விளக்கத்திற்கு, திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பதிலளித்துள்ளார்.

சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது கீழ்த்தரமான அரசியல் என்றும், இதுகுறித்து பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும், முதலில் ஆட்சியை ஒழுங்காக நடத்தி தகுதியை வளர்த்துக்கொண்ட பின், கருணாநிதி பற்றி பேசுவது நல்லது என்றும் கனிமொழி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்