சிமெண்ட் தரை மட்டுமே மிச்சம்! தேடிப்பிடித்து உதவி செய்த முகநூல் பயனாளி

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (19:48 IST)
கஜா புயலால் ஏற்பட்ட அழிவுகள், பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் பாதிகூட வெளியே வரவில்லை. எந்தவித தொடர்பும், போக்குவரத்தும், மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் பலர் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்து கொண்டிருக்கின்றது. எனவே நிவாரண பொருட்கள் கொண்டு செல்பவர்கள் கிராமப்பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தின் உள்புற கிராமம் ஒன்றில் சாமிநாதன் என்ற ஒரு பெரியவரின் வீடு முற்றிலும் இடிந்துவிட்டது. தரையில் உள்ள சிமிண்ட் தரையைவிட வேறு எதுவும் இல்லாமல் சாமிநாதனும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் வெட்ட வெளியில் தவித்து வருவதாக நேற்று இணையதளங்களில் செய்தி வெளிவந்தது.

சரியான முகவரி இல்லாததால், செல்போன் எண்ணை மட்டுமே கொண்டு அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்த முகநூல் பயனாளி ஒருவர் அவரது குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உதவி செய்துள்ளார். இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்புபவர்கள் 9715515199 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்