நடிகர் விஷாலுக்கு ஆந்திர பெண்ணுடன் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம்

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (10:38 IST)
நடிகர் விஷால் ஆந்திர பெண்ணை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
2004ம் ஆண்டு செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர் பிரபல திரைப்பட தயாரிபபாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் விஷால். இதைத்தொடர்ந்து சண்டக்கோழி, திமுரு, சிலப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை,  தீராத விளையாட்டு பிள்ளை, சமர், அவன்  இவன், இரும்புத்திரை, சண்டக்கோழி 2 என பல படங்களில் நடித்தார். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துடன் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின்  திருமணம் செய்து கொள்வேன் என விஷால் கூறியிருந்தார். இந்த பணிகள் வரும் ஏப்ரலில் முடிவடையும் என தெரிகிறது.  இந்நிலையில் விஷாலுக்கு பெண் பார்க்கும் முயற்சியில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வந்தனர்.  ஆந்திராவைச்  சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
 
மணப்பெண்ணின் பெயர் அனிஷா. ஆந்திராவைச் சேர்ந்தவர். விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இதற்காக விஷாலின் குடும்பத்தினர் விரைவில் ஐதராபாத் செல்ல உள்ளனர். அங்கு நிச்சயாத்த தேதியை முடிவு செய்கிறார்கள். இந்த தகவலை  விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்