விஜயகாந்த் கூட்டணி அறிவிப்பை வெளியிடுகிறார்?: இன்று தேமுதிக மகளிர் அணி மாநாடு

சுரேஷ் வெங்கடாசலம்
வியாழன், 10 மார்ச் 2016 (11:58 IST)
இன்று பிற்பகல் 3 மணிக்கு தேமுதிகவின் மகளிர் அணி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


 

 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி பற்றிய பேசுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
 
இந்நிலையில், தேமுதிகவின் கூட்டணி குறித்து பல்வேறு மாறுபட்ட தகவல்கள் தினம், தினம் வெளியாகி வருகின்றன.
 
எனவே, இத்தகு யூகங்களுக்கும் வதந்திகளுக்கும் விஜயகாந்த் இன்று முற்றுப் புள்ளி வைப்பார் என்றும், தனது கூட்டணி முடிவை வெளியிடுவார் என்றும் பேசப்படுகின்றது.
 
தற்போதய அரசியல் சூழ்நிலையில், விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைவார் என்று பெருவாரியாக கூறப்படுகின்றது.
 
அதேசமயம், பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் மக்கள் நல கூட்டணியினர் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
 
இந்த சூல்நிலையில், இன்று மதியம் 3 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ள அக்கட்சியின் மகளிர் அணி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
 
இந்த மாநாட்டில் விஜயகாந்த் தனது கூடடணி அறிவிப்பை வெளியிடக் கூடும் என்பதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.