நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில், அதிமுக தேர்தல் பிரசாரத்தில் கவர்ச்சிப்புயல் நடிகை நமீதாவை அதிமுக தலைமை புறக்கணித்துள்ளது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில், கவர்ச்சிப்புயல் நடிகை நமீதா, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்தார்.
இதனால், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக விவிஐபிக்கள் தொகுதிகள் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வார் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், கவர்ச்சிப்புயல் நடிகை நமீதா தேர்தல் பிரசாரம் செய்தால், வேட்பாளரைவிட, நமிதாவுக்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், நமீதாவை அழைத்துச் செல்வதில் கடும் போட்டி ஏற்படும் என்றும், மற்றவர்கள் பிரசாரம் எடுபடாமல் போகும் என்பதாலும், அனைத்து தொகுதிகளுக்கும் நமீதா செல்வது சாத்தியம் இல்லை என்றும், இதனால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும் என்றும், ஒரு தொகுதி சென்றுவிட்டு, வேறு தொகுதிக்கு செல்லவில்லை என்றால், மக்கள் எதிர்பார்த்து ஏமாந்து போவார்கள் என்றும் மாநில உளவுத்துறை ரிப்போர்ட் போட்டதாம். இதனையடுத்தே நமீதா தேர்தல் பிரசாரத்திற்கு பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.