பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகிறார் ஓவியா?..

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2017 (11:48 IST)
உடல் நிலை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே நடிகை ஓவியா மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மீது ஓவியா காதல் வசப்பட்டது போல் நடந்து கொண்டார். ஆனால், ஓவியாவின் காதலை ஏற்காத ஆரவ் அவரை புறக்கணித்து வருகிறார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ள ஓவியா அரக்கத்தனமாக நடந்து வருகிறார். இது ஓவியா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
இந்நிலையில் நடிகை ஓவியா காதல் தோல்வியால் பிக் பாஸ் வீட்டில் நேற்று மாலை தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடி வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன. சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இதனையடுத்து பிக் பாஸ் வீட்டில் காவல்துறை உயர் அதிகாரிகள் நுழைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து ஓவியா தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை அதனால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. அதன் பின் போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
 
தற்போது ஓவியாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  மேலும், சிகிச்சை முடிந்து ஓவியா மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பார் எனக்கூறப்படுகிறது. ஏனெனில், ஓவியாவிற்காகத்தான் பலரும் அந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். ஓவியாயை வெளியேற்றிவிட்டால் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி அதாள பாதாளத்திற்கு சென்று விடும் எனக்கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்