ஐஸ்வர்யாவின் இரண்டு ஆசை ! நிறைவேற்றுவார்களா தமிழக மக்கள்

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (11:44 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைகிறது. இறுதிகட்டத்தில் ஐஸ்வர்யா, ரித்விகா, விஜி, ஜனனி என நான்கு பேர் மட்டுமே உள்ளனர்.

 
இந்நிலையில் ஐஸ்வர்யா கமலிடம் பேசுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இவ்வளவு தூரம் வருவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. 2 வாரத்திலயே  வெளியேற்றப்படுவேன் என நினைத்தேன், ஆனால் 14 வாரங்கள் இருந்துள்ளேன். இதெல்லாம் தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்தை தான் காட்டுகிறது  என கூறினார். இதை கேட்ட கமல் அப்படியே திரும்பி பார்வையாளர்களை பார்த்து சிரித்தார்.
 
தொடர்ந்து பேசிய  ஐஸ்வர்யா, தனக்கு 2 ஆசைகள் உள்ளதாக தெரிவித்தார். ஒன்று தமிழக மக்கள் எனக்கு க்ரீன் கார்ட் கொடுத்து அவர்களில் ஒருவராக தன்னை ஏற்று கொள்ள வேண்டும். இரண்டாவது தனக்கு அந்த பரிசு தொகை 50 லட்சம் எல்லாம் வேண்டாம். ஆனால் அந்த இறுதி மேடையில் நான் ஏற  வேண்டும் என்பது தான் ஆசை என மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்