பல ஆண்டுகளுக்கு பின் களத்தில் இறங்கிய யுவ்ராஜ்… தொடங்கியது நயன்தாரா பட ஷூட்டிங்!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (16:37 IST)
இயக்குனர் யுவ்ராஜ் தெனாலி ராமன் படத்துக்குப் பின்னர் இயக்கும் அடுத்த  படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

இயக்குனர் யுவ்ராஜ் பட்டாப்பட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பிறகு அவர் வடிவேலுவின் ரி எண்ட்ரி படமான எலி மற்றும் தெனாலி ராமன் ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் அந்த படங்கள் பேர் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. இதனால் அவருக்கு அடுத்த படங்கள் கிடைக்க தாமதமானது.

இந்நிலையில் இப்போது அவர் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. படத்தில் வில்லனாக நடிக்கும் விதார்த் சம்மந்தபட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்