கிடார் வேணாம் …அஜித்தின் வேண்டுகோளை வலிமையில் நிறைவேற்றிய யுவன்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (17:21 IST)
அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன்ஷங்கர் ராஜா.

அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களுக்கு எல்லாம் யுவன் இசையமைத்திருப்பார். அந்த வகையில் தீனாவில் ஆரம்பித்த இருவரின் பயணம் இப்போது வலிமை வரை வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் மிக முக்கியமாக யுவனின் தீம் இசை அனைவரையும் கவர்ந்துள்ளது.

இது சம்மந்தமாக சுவார்ஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு யுவன் அளித்த ஒரு நேர்காணலில் பேசிய யுவன் ‘நேர்கொண்ட பார்வை படத்தின் இசைப் பணிகளின் போது என்னை அழைத்த அஜித் சார், இந்த படத்தின் இசையில் கிடாரை அதிகமாக பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் நம் முந்தைய படங்களான பில்லா, மங்காத்தா ஆகியவற்றில் அதை அதிகமாக பயன்படுத்தியுள்ளீர்கள் எனக் கூறினார். ஆனால் அந்த படத்தில் என்னால் கிடார் இசையைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இப்போது வலிமையில் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மிரட்டலான இசையமைத்துள்ளேன்’ எனக் கூறியிருந்தார்.

அதை போலவே நேற்று வெளியான மோஷன் போஸ்டர் இசைத் துணுக்கில் கிடார் கருவியிசை இலலாமல் தீம் இசை இடம்பெற்றிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்