யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் திரைப்படம்: டைட்டில் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (17:48 IST)
யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் திரைப்படம்: டைட்டில் அறிவிப்பு!
பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு அவ்வபோது ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திற்கு மெடிக்கல் மிராக்கல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யோகிபாபு ஓலா டிரைவர் கேரக்டரில் நடித்து வருவதாகவும் காதல் காமெடி திரில்லர் ஆகியவை இந்தப் படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ஏ1, பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களை இயக்கிய ஜான்சன் இந்த படத்தை இயக்கவுள்ளார் என்பதும், மேலும் இந்த படத்தை அவர் தயாரிக்கவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
யோகிபாபு உடன் இந்த படத்தில்  மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத்,  KPY வினோத்,  KPY பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்