திமுக, அதிமுக, பாஜகவை வெளுத்த வாங்கிய யோகிபாபு

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (20:31 IST)
யோகிபாபு முதல்முறையாக முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'தர்மபிரபு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
இந்த டீசரில் யோகிபாபு பேசும் வசனங்களில் ஒன்றான 'அம்மா போனால் சின்னம்மா, அய்யா போனால் சின்னய்யா' என்பது அதிமுக, திமுகவை மறைமுகமாக தாக்குகிறது. அதேபோல் அக்கவுண்டில் பணம் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு ஆடைகளாக போட்டுக் கொண்டிருக்கிறாரா? என்று பாஜகவையும் யோகிபாபு வசனம் விட்டு வைக்கவில்லை.
 
மேலும் பாவம் செய்தவர்களை சொர்க்கத்திற்கும், புண்ணியம் செய்தவர்களை நரகத்துக்கும் அனுப்ப போகிறேன் என்றும், இங்கு எல்லோரும் தகுதியுடன் தான் பதவி ஏற்கிறார்களா? என்ற வசனமும் அரசியலை மையப்படுத்துகிறது. 
 
பெரிய ஸ்டார்களே அரசியல் கட்சிகளை தங்களது படங்களில் நேரடியாக விமர்சிக்க தயங்கும் நிலையில் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திலேயே யோகிபாபு அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளையும் தைரியமாக கலாய்த்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.  இந்த படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.
 
முத்துகுமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபு, கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்