கொரோனா பாதிப்பு எதிரொலி.. யோகி பாபு செய்த நல்ல காரியம்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (16:46 IST)
யோகி பாபு கொரோனாவுக்கு பிறகு தனது சம்பளத்தைக் கணிசமாக குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனாவுக்கு பிறகு தமிழ் சினிமா உலகம் கடுமையாக ஆட்டம் கண்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் முன்னணி கலைஞர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று குரல்கள் எழுந்தாலும் யாரும் குறைப்பதாக தெரியவில்லை.

ஆனால் முதல் ஆளாக யோகி பாபு தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுள்ளாராம். புதிதாக படம் ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் தனது சம்பளத்தைப் பற்றி கறாராக பேசாமல் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்