யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் லக்கி மேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (08:10 IST)
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதையடுத்து சமீபத்தில் அவர் நடித்த பொம்மை நாயகி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இப்போது பிரபல நகைச்சுவை நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் லக்கிமேன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்