யோகிபாபுவின் 'தர்மபிரபு' இசை வெளியீடு தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (22:43 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு முதல்முறையாக ஹீரோவுக்கு இணையான ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். எமதர்மனாக ராதாரவியும், எமதர்மனின் மகனாக யோகிபாபுவும் இந்த படத்தில் நடித்து வருவதாக தெரிகிறது. மேலும் நடிகை ரேகா யோகிபாபுவுக்கு அம்மாவாக நடிக்கின்றார்.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் மே 4ஆம் தேதி சனிக்கிழமை இந்த படத்தின் பாடல்கள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே இறுதியில் இந்த படத்தை வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
யோகிபாபு, கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக், ரேகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை முத்துகுமரன் இயக்கி வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்