மீண்டும் ஒரு மலையாளப் படம் பார்சல் – தமிழில் ரீமேக் ஆகும் உறும்புகள் உறங்கானில்லா!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:49 IST)
மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற உறும்புகள் உறங்கானில்லா திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது.

சின்ன பட்ஜெட், அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம், நிலத்தோடு சேர்ந்த கதை, சிறப்பான திரைக்கதை இவையே மலையாள படங்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைகின்றன. ஓடிடி பிளாட்பார்ம்களின் வருகைக்குப் பின்னர் இதுபோன்ற மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகின்றன.

அதனால் அதுபோன்ற படங்கள் தமிழில் இப்போது ரீமேக் செய்யப்பட இருக்கின்றன. ஏற்கனவே ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் மற்றும் அய்யப்பனும் கோஷியும் ரீமேக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது உறும்புகள் உறங்கானில்லா என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. திருடர் கூட்டம் ஒன்றில் சேர்ந்து தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்கும் மகனின் கதையே உறும்புகள் உறங்கானில்லா. இந்தப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்