கேஜிஎஃப் 2’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (12:08 IST)
பிரபல நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே
 
இதே தேதியில்தான் தளபதி விஜய்யின் பீஸ்ட் படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’கேஜிஎஃப் 2’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
 ’கேஜிஎஃப் 2’ படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40  மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து யார் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
 
யாஷ், சஞ்சய்தத், ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்